சமைப்பதில் சிறந்தவரான எனது அன்னையிடம் இருந்து எப்படி சமையல் பண்ணுவது என்ற நான் கேட்டுக்கொள்ளலாம், பல சமையல் புஸ்தகங்களை படித்து நான் சமையல் பற்றி தெரிந்து கொள்ளலாம், நான் கேட்டதையும் படித்ததையும் சிலாகித்து நான் நன்றாக பேசலாம். ஆனால், முறையாக எனது அன்னையிடமோ அல்லது வேறு நன்கு சமையல் தெரிந்தவரிடமோ, எப்படி சமைப்பது என்பதை அனுபவ பூர்வமாக பயிற்சி எடுக்காமல், நான் நன்கு சமைப்பது என்பது இயலாத காரியம். அதே போல் ஆன்மீகத்திலும், ஒரு குரு நமக்கு அனுபவப்பூர்வமாக வழி முறைகளை காட்ட வேண்டும். ஆயிரம் புத்தகங்களை படித்தாலும் ஆயிரக்கணக்கான சொற்பொழிவுகளை கேட்டாலும் குருவுடன் இருந்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே கற்றுணர்ந்த பெரியவர்களின் கூற்று.
குரு நமக்கு உள்ளே இருக்கும் தக்ஷ்ணாமூர்த்தியை எழுச்சியுறச்செய்கிறார். உண்மையான குருவும் சிஸ்யனும் நம் உள்ளேயே இருக்கிறார்கள். வெளியில் இருக்கும் குரு ஒரு கிரியா ஊக்கியாக இருக்கிறார்.
என்னுடைய வருங்கால குருவும், என் உள்ளே இருக்கும் குருவும் ஞானத்தை மறைக்கும் திரைகளை விளக்கி எனக்கு சத்தியத்தை காட்டட்டும்.
பதஞ்சலியின் யோக சூத்திரம் "யோகஸ் சித்த வ்ருத்தி நிரோத" என்று துவங்குகிறது. அதாவது, சிந்தனையோட்டம் இல்லாமல் இருப்பதே யோக நிலை என்கிறது. அதற்கு மாறாக நான் கற்றவைகளை எனது சிந்தனைகளாக இங்கே வடிக்கிறேன். இது மனன நிதித்யாசன வழி என்று நான் சமாதானம் சொல்லிக்கொள்ளலாம்.
Thursday, December 18, 2008
குரு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment