உடலால் ஏற்படும் வலியையும் வேதனையையும் விட்டுவிடுவோம். அதை வெல்வது ஞானிகளால் தான் முடியும். நம்மைப்போன்றவர்களுக்கு பெரிதாக தெரிவது மனவலியும் மனவேதனையும் தான்.
பல நேரங்களில் நமக்கு வலியையும் வேதனையையும் தருவது பிறருடைய நடவடிக்கை தான். ஆனால், ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நம்முடைய அனுமதி இல்லாமல் யாரும் நமக்கு வலியையும் வேதனையையும் தர முடியாது. ஏனென்றால், நாமே நமது மன வலிக்கும் வேதனைக்கும் காரணம்.
மற்றவர்கள் எப்படி நமக்கு வலியும் வேதனையும் உண்டாக்குகிறார்கள்? நம்மை மட்டம் தட்டுவதால், நம்மை எகத்தாலமாக பேசுவதால், நாம் சொன்னதை அல்லது எழுதியதை அல்லது நமது நடவடிக்கைகளைப்பற்றி தரக்குறைவாக நக்கலாக பேசுவதால், அல்லது நம்மைப்பற்றி அவதூராக மற்றவர்களிடம் சொல்வதால், அல்லது நாம் செய்யாததை அல்லது சொல்லாதததை செய்தது மாதிரி, சொன்னது மாதிரி திரித்து சொல்வதால், அல்லது நமக்கு கலங்கம் விளைவிப்பது போல் நடந்து கொள்வதால்.
இது எல்லாவற்றிலும், நமது ஒரு நிலைப்பாட்டை (position ஐ) நாம் நினைத்துக்கொண்டிருக்கும் இடத்திலிருந்து இறக்க மற்றவர்கள் முயல்வதால் நமக்கு வேதனை வருகிறது. இங்கு relativistic ஆக, நாம் மற்றவர்கள் எப்படி நம்மைப்பற்றி நினைப்பார்கள் என்று நினைப்பதால் தான் இவ்வளவு பிரச்சனையும். நாம் நம்மை பற்றி ஒரு நிலைப்பாட்டை ஏற்படுத்திக்கொண்டு, அதில் இருந்து நான் இறங்கப்போவதில்லை என்று இருந்தால், நமக்கு யாரும் எந்த வேதனையும் கொடுக்க முடியாது. ஆக எந்த ஒரு வேதனையும் வலியும் நம்மில் இருந்து தான் தொடங்குகிறது.

No comments:
Post a Comment