இருப்பதை மறைக்கும் புகையை
விளக்க வந்ததே
இறை நம்பிக்கையும்
மதங்களும்
மதச்சடங்குகளும்
ஆனால், இன்று அவைகளே
விளக்கி ஒதுக்க முடியாத
இரும்புத்திரைகளாக
பரிணமித்துபோயின படியால்
இருப்பதை மறைக்கும் புகையை
விளக்குவது என்பது எட்டாது போனது
அந்தோ பரிதாபமே.
பற்றறுக்கத்தான் கடவுள்.
கடவுள் பற்றும்
மதப்பற்றும்
இருக்கும் பற்றுகளை
இருகத்தான் செய்கின்றன.
இரும்புத்திரைகளாகிப்போன
இறைப்பற்று
மதப்பற்று
மதச்சடங்கில் பற்று
என்று அதிகப்படியாக நம்
முதுகில் ஏற்றுள்ள
பற்றுகளை அறுத்தாலன்றி
தெய்வத்தை மறைக்கும்
புகைவிலகா.
மென்மையான புகையைவிளக்க வந்தது
எஃகாகிப்போனது
அந்தோ பரிதாபம்.
No comments:
Post a Comment