பொதுவாக எல்லோரும் சொல்வார்கள்...
"இறந்தகாலம் இல்லாது இறந்து போயிற்று, அதை நினைத்து பிரயோஜனம் ஒன்றுமில்லை
வரும்காலம் என்ன என்பதே தெரியாது, அதை நினைப்பதும் பிரயோஜனம் ஒன்றுமில்லை
ஆக நிகழ்காலமான இந்த நொடியை ஆழ்ந்து அனுபவிப்பதே சிறந்தது, அதனாலேயே நிகழ்காலம் present என்று சொல்லப்படுகிறது. நிகழ்காலமும், அதன் அனுபவமும் கிடைத்தற்கு அறிதான பொக்கிஷம்" என்று.
ஆனால், காலத்தை மேலும் ஆயும் போழுது...
நிகழ்காலம் என்பதை கால அளவுகளில் பார்க்கும் பொழுது, எதை நிகழ்காலம் என்பது, ஒரு நாளையா, ஒரு மணியையா, ஒரு நிமிடத்தையா, ஒரு வினாடியையா... இல்லை அதை இன்னும் கூர்ந்து நோக்கும் பொழுது ஒரு வினாடியின் 1/1000000000000+ என்ற மிக மிக நுண்ணிய காலத்துளியே நிகழ்காலம். ஒரு வினாடியின் 1/1000000000000+ என்ற கால அளவு முடிந்து அடுத்த 1/1000000000000+ கால அளவு வரும்போழுது முந்தைய 1/1000000000000+ கால அளவு இறந்தகாலமாகிப்போய்விடுகிறது.
ஆக, நாம் உண்மையில் வாழ்வது மிக மிக நுண்ணிய காலத்துளியே, மற்றவையெல்லாம், இறந்தகால சிந்தனையிலும் எதிர்கால எதிர்பார்ப்பிலும் தான். இன்னும் சொல்லப்போனால், இந்த நுண்ணிய கால அளவை வைத்து பார்க்கும் பொழுது, நிகழ்காலம் என்பது இல்லாமலே போய்விடுகிறது.
நிகழ்காலம் - சொல்லிமுடிக்கும் முன் இறந்தகாலம்.
ஆக நிகழ்காலம் என்பதே இல்லாது போயின்
இறந்த காலத்தில் வாழ்ந்தென்ன ஆவது.
வருமுன்னே புதைந்து கனவாகி இல்லாது போகும்
நிகழ்காலத்துக்காகவே நமது முயற்சி அத்தனையும்.
No comments:
Post a Comment